Feb 6, 2013

விஸ்வரூபம் - விமர்சனம் அல்ல


விஸ்வரூபம் - இந்த படத்தை கமல் எந்த நேரத்தில் தொடங்கினாரோ எல்லா வகையுளும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி கொண்டிருகிறது.

பல தடைகளை (:)) தாண்டி கடந்த மாதம் 26 அன்று உலகமெங்கும் வெளியிடப்பட்டது தமிழகம் தவிர (1000 பஞ்சாயத்து இருக்கு சொல்ல ஒன்ன ரெண்டா). அடிச்சு புடிச்சு சத்யம்ல புக் பண்ணா, ரிலீஸ் அன்னைக்கு நோட்டீஸ் போர்டு போட்டு பணத்தை திருப்பி தரோம்னு சொல்லிட்டாங்க. போங்கடா நீங்களும் உங்க சாமி பக்தியும் னு திட்டிட்டு கேரளாவில் படாத பார்க்கலாம்னு நெனச்சேன்.

கேரளா நமக்கு ரொம்ப பக்கம், ஒரு வாரம்  பழனி கோவில் சென்று விட்ட காரணத்தால் என்னால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. கடந்த சனிகிழமை அன்று தான் பார்க்கும் முடிவுக்கு வந்தேன். இதற்கு முன்பே குறைந்த பட்சம் 100 விமர்சனங்களை படித்துவிட்டேன்.

சனிக்கிழமை மதியம் நானும் என் மனைவியும் பாலக்காடு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்து புறப்பட்டோம்.

பாதி வழியில் திட்டத்தை மாற்றி கொண்டு வேலாந்தவளம் சென்று பார்க்கலாம் என முடிவாயிற்று.

அதிலும் ஒரு சோதனை வேலாந்தவளம் சென்றால் ஒரு அரங்கத்தில் மட்டுமே படம் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் பாலக்காட்டில் 3 அரங்கங்களில் திரையிடப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் இல்லை என்றால் திரும்பவும் பாலக்காடு செல்ல அல்லைச்சல் அதிகம்.

வேலாந்தவளம், பாலக்காட்டு-கோவை  மெயின் ரோட்டில் இருந்து ஒரு 10 km இருக்கும். சாலையின் தரம் தான் மிக கேவலமாக இருந்தது . தினமும் இதில் பயணிக்கும் மக்களின் நிலைமை மிக மோசமானது.

இந்த அழகான பயணத்தின் இறுதி அந்த அரங்கத்தில் முடிவடைந்தது. நாம் மட்டும் புத்திசாலி என நினைக்கும் போது  மூக்கு உடைபடுவோம். அது எனக்கு அங்கே நடந்தது. மிக சிறிய அரங்கம் ரசிகர்கள் கூட்டத்தால் திணறியது.



என் மனைவியை வைத்துகொண்டு இங்கு படம் பார்ப்பது முட்டாள் தனமான (டிக்கெட் கிடைக்கவில்லை :)) காரியம் என்று கிளம்ப நினைக்கும்போது, இவளவு தூரம் வந்தும் படம் பார்க்காமல் போவது சரியா என கேட்டதால் பாலக்காடு  செல்ல முடிவெடுத்து கிளம்பினோம். வேலாந்தவளம் to பாலக்காடு  ரோடு மிக அருமையாக இருந்தது. பயண அலுப்பு சிறிது கூட ஏற்படவில்லை.

பாலக்காட்டில் ஸ்ரீ துர்கா அரங்கம்  மிக அருகில் இருந்ததால் அங்கு மட்டும் சென்று பார்போம் என முடிவெடுத்தோம். ஆனால்  அங்கேயும் கோவை மக்கள் குவிந்து இருந்தனர். பார்க்கிங் செய்உம்போது ஒருவர் Rs 1000 குடுத்து  இதை  போய் பார்க்கின்றனர் என்று கடுப்பை கிளப்பினர். பிறகு விசாரித்ததில் தெரிந்தது அடுத்த ஷோவும் விற்று தீர்ந்தது என்று.




இதில் கொடுமை என்னவென்றால் மதிய உணவை மறந்து இந்த வேலையை  செய்து கொண்டிருந்தோம். சரி இனி அந்த வேலையையாவது ஒழுங்காக முடிப்போம் என்று அருகில் இருந்த  Jobey mall  சென்றோம்.

வழக்கம் போல Food  Court கடைசி தளத்தில் இருந்தது. கேரளா ஸ்டைல் உணவை ஒரு பிடி பிடிக்கலாம் எனும் சந்தோஷம் மற்றும் ஹோட்டல்-ம் அதற்கு ஏற்ப மிக பெரிதாக இருந்ததால் நம்பி உட்கார்ந்தோம்.

எல்லா ஆட்களும் மிக அழகாக உடை உடுத்தி இருந்தனர். ஆனால் சாப்பாடு கொடுங்கடான்னு வாய தொறந்து கேட்டா கூட கண்டுக்கல.  அதையும் மீறி ஆர்டர் பண்ணா கேட்கற ஏதும் இல்லன்னு சொன்னான், சரி ராஜா என்னதான் இருக்குனு கேட்ட பரோட்டா-ம் சப்பாத்தி மட்டும் தான்னான். ஓகே கொண்டு வர சொல்லிடு வெயிட் பண்ணா   கொண்டு வந்தான் பாருங்க ஒரு சாப்பாடு. ஒரு taste ம் இல்ல. வெறுத்து போச்சு. பேசாம பில்லை கொடுத்துட்டு வெளிய வந்துட்டு  ஒரு நல்ல கடையா  பார்த்து ஐஸ் கிரீம் சாப்டோம் .



இன்னைக்கு திரும்பவும் தமிழ் நாட்டில் படம் வெளியிட தடை நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அதே சத்யம் சினிமா ல் புக் செய்துள்ளேன். படத்தை பார்த்து விட்டு கண்டிப்பாக விமர்சனம் எழுத மாட்டேன்.  :::)