விபத்து இது நாம் சந்திக்காதவரை நாம் பெரிதாக கருதிக்கொள்ளாத ஒன்று, சந்தித்த பின்பு அறிவுரை சொல்ல வைக்கும் ஒன்று (உயிரழப்பு ஏற்படாமல் இருந்தால்).
கடந்த 2 மாதங்களில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை காரணம் ஒரு விபத்து. முதலில் இந்தியாவில் விபத்துக்கான காரணங்கள் பற்றி ஒரு சிறுஅலசல்.
இன்று உலக அளவில் அதிக உயிர் இழப்பை உண்டாக்குவது - சாலை விபத்து. அதற்கான காரணங்கள் மிக வேகம், பாதுகாப்பில்லா பயணம், போதை மற்றும் விதி மீறல். காரணம் எதுவாக இருந்தாலும் முடிவு உயிரழப்பு அல்லது காயம் என்பதுவே.
விபத்துக்கான முதல் காரணி வாகனம், அவை எந்த வகையாக இருந்தாலும் சரி (சைக்கிள் முதல் ட்ரக் வரை).
வாகனம்:
2010 ம் ஆண்டில் இரு சக்கர,மற்றும் கன ரக வாகனங்களும் விபத்தை ஏற்படுத்தியதில் 47% ம், கார்கள் 22% ம் பங்கு வகிக்கின்றன. அதுவே உயிரழப்பை ஏற்படுத்திய விபத்துகளில் கன ரக வாகனங்கள் அதிக பட்சமாக 29% ம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 28% பங்கு வகிக்கின்றன. அது போல விபத்துக்கு பிந்தய உயிரழப்புகளில் இவை இரண்டு வகையே முறையே 29% மற்றும் 27% ஆகும். இதுவே காயம் அடைபவர்கள் இரு சக்கர வாகனங்களில் 22% ம், கன ரக வாகனங்களில் 22%ம் ஏற்படுகிறது. இவ்வகை விபத்துக்கள் அதிகமாக நெடுஞ்சாலைகளில் நடப்பவை, இதில் உயிர் பிழைக்கும் வாய்ப்புகளும் மிக குறைவு, காயம் என்பதோ ஊனம் என்ற அளவில் இருப்பவை.
நம்முடைய கவனம் 200% இருந்தால் மட்டுமே உயிரழப்பு அல்லது விபத்தை தவிர்க்க முடியும்.

சாலை:
விபத்து மற்றும் உயிரிழப்புகள் வாகனங்களால் மட்டுமல்ல சாலைகளாலும் ஏற்படுகின்றன. நமது நாட்டில் அதிக சதவிகித சாலைகள் மோசமானவைதான். கீழே உள்ள பட்டியல் படி பார்த்தால் தேசிய மற்றும் மாநில சாலைகளை விட கிராமப்புர சாலைகளிலேயே அதிக விபத்து மற்றும் உயிரழப்பு ஏற்படுகிறது.

தேசிய, மாநில மற்றும் இதர சாலை விபத்து எண்ணிக்கை முறையே 30%, 25% மற்றும் 45% இருக்கின்றது. இதில் உயிரழப்பு எண்ணிக்கை முறையே 36%, 27% மற்றும் 37% என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை முறையே 31%, 26% மற்றும் 43% என்று உள்ளது.
இந்த முடிவுகளின் படி நாம் அறிவது விபத்தோ , உயிரழப்போ அவை அதிகம் நடப்பது கிராம மற்றும் இதர சாலைகளிலேயே. நான் விபத்துக்குள்ளானதும் இந்த வகை சாலையில் தான். என்னத்த சொல்ல:(
Top 5:
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கடந்த 2010 ல் நடைபெற்ற விபத்து மற்றும் உயிரழப்புகளில் முதல் 5 இடங்களைப்பெற்றுள்ள மாநிலங்கள் உள்ளன:
Top 5:
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கடந்த 2010 ல் நடைபெற்ற விபத்து மற்றும் உயிரழப்புகளில் முதல் 5 இடங்களைப்பெற்றுள்ள மாநிலங்கள் உள்ளன:
நம் தமிழகம் 3 அட்டவணைகளிலும் முதல் 3 இடங்களுக்குள் உள்ளது.
இந்த பட்டியல் நாட்டின் முக்கிய நகரங்களில் 2010 ம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் உயிரழப்புகள் பற்றியது. தமிழகத்தின் 3 நகரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. எண்ணிக்கையின் படி சென்னை முதலிடத்திலும் இறப்பு விகித அடிப்படையில் கோவை முதலிடத்திலும் உள்ளது (அதாவது 100 விபத்துகளுக்கு 24 உயிரழப்பு ஏற்படுகிறது).
இந்த புள்ளி விவரங்களை நாம் மேலோட்டமாக கடந்து செல்லலாம், ஆனால் நம்முடைய கவனம் சிறிது தவறும்போது இந்த எண்ணிக்கையில் நாமும் சேர்ந்துவிடுவோம் என்பதை மறக்க வேண்டாம்.
விபத்து பற்றிய திரு. தமிழ்நிலா அவர்களின் கவிதை:
வீதிகள் எங்கும்
புதைக்கப்படுகின்றன
வேக வெடிகள்..
சந்திகளில் எல்லாம்
அமைக்கப்படுகின்றன
விபத்து நிலையங்கள்...
கனரக ஆயுத அழிவை
கடந்து வந்தால்,
கன(ரக) வாகன அழிவு...
சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!
அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...
நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...
-தமிழ்நிலா
கன(ரக) வாகன அழிவு...
சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!
அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...
நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...
-தமிழ்நிலா
0 comments :
Post a Comment