ஒலிம்பிக் போட்டியை நடத்த உலக நாடுகள் போட்டியிடுகின்றன. அதை திறம் பட நடத்துவது என்பது பெருமையான விஷயம் என்றாலும் நடத்தும் நாட்டின் மற்றும் நகரத்தின் பொருளாதார, உள் கட்டுமான வளர்ச்சிக்கும் உதவும். அதிக பணம் செலவழித்து நடத்தவேண்டுமா என கூவும் மணி சங்கர் போன்ற ஆட்கள் ஏன் எதுவும் தெரியாதது போல பேசுகிறார்கள் என்பது முழு அரசியல்.
நாம் காமன்வெல்த் போட்டிகளை நடத்தவே திணறினோம். அதற்கு காரணம் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் மற்றும் திறமையற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும். இதையே சிறந்த திட்டமிடல் மூலம் மிகவும் வெற்றிகரமானதாக மாற்றி இருக்க முடிந்திருக்கும். பழைய நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்காமல் புதிய ஒன்றை கட்டியிருக்கலாம் அல்லது வேறு நகரத்தில் நடத்துவதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு உதவி இருக்கலாம். கட்டிய பாலமே பத்து நாளில் இடிந்து விழுந்தது நம் சாதனை.
1964 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஜப்பானுக்கு கிடைத்தது. அதனை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இரண்டாம் உலக யுத்தத்தில் அழிந்து போயிருந்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு மாற்ற உதவியது. மற்றும் உலகிற்கு தன்னுடைய புதிய முகத்தினை காட்ட உதவியது.
1976 போட்டியை கனடா பெற்று மிக மோசமான திட்டமிடல் காரணாமாக $2 பில்லியன் நட்டம் அடைந்தது.
1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியானது பொது மற்றும் தனியார் பங்களிப்பில் மிகப்பெரிய இலாபம் ஈட்டியது.
1988 சியோல் போட்டியை அரசே நடத்தியதில் $300 மில்லியன் லாபம் அடைந்தது.
1992 பார்சிலோனா போட்டியானது மிக குறைந்த லாபமே அடைந்தாலும் அந்நகரத்தின் உள் கட்டுமான வளர்ச்சிக்கு உதவியது.
2004 ஏதென்ஸ் போட்டியானது அந்நாட்டை கடன் நெருக்கடியில் தள்ளி மொத்த ஐரோப்பாவையும் பாதித்தது.
2008 பெய்ஜிங் போட்டியின் லாபம் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அந்நகர கட்டமைப்பு வளர்ச்சி பெற்றது.
2012 இலண்டன் போட்டிகளோ கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு உதவியது. அவர்கள் லண்டன் லெகசி 2020 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தி உள்ளனர்.
2016 போட்டியினை நடத்த ரியோ டி ஜெனிரோ நகரம் தயாராகிக்கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் முதல் முறையாக போட்டி நடை பெற உள்ளது.
மேல் உள்ள தகவல் படி சரியான திட்டமிடல் மூலம் வளர்ச்சிக்கு உதவலாம். உடன் வீரர்களுக்கும் உலகத்தரத்திலான விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற உதவும். இதை வெறும் பெருமைக்கு நடத்துவதை விட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டாவது நம் நாடு நடத்த முன் வரலாம். ஒரு வாரம் முன்பு 2020 போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாம் 2024 போட்டிகளுக்காவது தயாராகலாம். யார் இதை பற்றி யோசிப்பது.
எல்லா விளையாட்டு அமைப்புகளிலும் அரசியல்வாதிகளே 20-30 வருடங்களுக்கு மேலாக தலைவராக உள்ளனர். பாட்டியாலா ராஜ குடும்பத்தினர் அரை நூற்றாண்டுக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளனர். ஒலிம்பிக் கவுன்சில் சட்டங்களின் படி நாட்டின் ஒலிம்பிக் கவுன்சில் அரசியல் தலையீடில்லாத சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்.
தற்போது இந்தியா ஒலிம்பிக் கமிட்டி ஊழல், அரசியல் தலையீடு மற்றும் IOC ன் சட்டங்களின் படி நடக்காதது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நம் தேசியக்கொடி பிடித்து செல்ல முடியாது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி உள்ள மிகப்பெரிய இழுக்கு.

ஜெய் ஹிந்த்!