இருபது வருடங்களுக்கு முந்தைய தீபாவளியை இன்றைய நாளுடன் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யவே முடியாத அளவுக்கு மலையளவு வளர்ந்துள்ளது. அன்றைக்கு வெறும் 500 ரூபாயில் முடிந்த நாள் இன்றைக்கு 10,000 க்கு குறைவில்லாமல் தேவைப்படுகிறது. புது துணியை எதிர்பார்த்து காத்திருப்பது, பட்டாசு வாங்கும் நாளை எதிர்பார்ப்பது என எல்லாமே எதிர்பார்ப்பில் கழிந்த நாட்கள் அவை. இன்றைக்கு தேவையான பணம் இருந்த போதிலும் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.
முன்பு தீபாவளி என்பது பள்ளியின் விடுமுறை நாளை எதிர்பார்த்து ஆரம்பிக்கும். வீட்டில் புது துணி எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற ஏக்கம் தொடங்கும். தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் புது துணி கிடைக்கும். அதை டெய்லரிடம் கொண்டு சென்றால் தீபாவளி அன்றைக்குத்தான் கிடைக்கும் என்று இடியை இறக்குவார். அம்மாவிடம் சொன்னால் அவரின் திட்டலில்தான் கொஞ்சம் முன்பே தருகிறேன் என்பார். ஆனாலும் அதிக தீபாவளி புது துணிகள் முந்தைய நாள் இரவு வரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்க வைத்தே டெய்லர் தந்துள்ளார்.
அதேபோலத்தான் பட்டாசுகளும். பள்ளியின் அருகில் கிடைக்கும் விலை பட்டியல் மற்றும் ஊரில் கிடைக்கும் பட்டியல்களை கொண்டு பட்டாசுகளை முன்பே மலையளவு குறித்து வைத்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ கடுகளவு தான். அதுவும் அப்பா போனஸ் வந்தால்தான் பட்டாசு என்று சொல்லிவிடுவார். எனவே சில காலம் போனஸ் என்றால் என்னவென்றே தெரியாமலும், தெரிந்த பின்னர் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்தது. பட்டாசு வாங்க ஊருக்கு அருகிலிருக்கும் FCI கிடங்கிற்கு அப்பா கூடிச்செல்வார். அது அரசாங்க கடை என்பதாலும், அங்கு விற்பனையில் இருப்பவர் அப்பாவிற்கு தெரிந்தவர் என்பதாலும், நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கடையில் மட்டுமே பட்டாசு வாங்கியுள்ளேன், இன்று வரை.
தீபாவளியின் அதிகாலை என்பது எண்ணை குளியலுடன் ஆரம்பிக்கும், அம்மா தங்கைக்கும் எனக்கும் நல்லெண்ணெய் தேய்த்துவிட அப்பா வைத்த சுடு தண்ணீரில் குளித்து விட்டு புது துணி உடுத்திக்கொண்டு முதல் சரத்தை கொடுத்து வைக்க சொல்வார். அதன் பின்னர் அவரும் குளியலை முடித்துக்கொண்டு சைக்கிளில் குல தெய்வம் கோவில், மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் என சென்று அங்கும் ஒவ்வொரு சரத்தை காணிக்கை வைக்க வேண்டும். பிறகு தான் மிச்சம் இருக்கும் வெடிகளை தொட வேண்டும் அவற்றை நண்பன் மோகனுடன் போட்டி போட கொஞ்சம் வெடிகள், பாட்டி வீட்டில் கொஞ்சம் வெடிக்க வெடிகள் என கணக்கு நீண்டு கொண்டே போகும். அதிலும் இரவில் வெடிக்கும் வெடிகள் தங்கைக்கும் மிச்சம் மீதி கார்த்திகை தீபத்திற்கும் கொடுத்து விட வேண்டும். ஆனாலும் அந்த நாளின் நினைவுகள் இன்றும் நீங்காமல் உள்ளன.
வளர்ந்த பின்பு நண்பர்குலடன் சேர்ந்து கொண்டு கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை. ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில் ஒரு புறம் நாங்களும் மறு புறத்தில் மற்றொரு நண்பர்களும் நின்று கொண்டு பட்டாசுகளை மேலே வீசிக்கொண்டும் ராக்கெட்டுகளை நிலத்தில் படுக்க வைத்தும் விடுவோம். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஆனதில்லை, சில வாசல் கூரைகள் தீப்பிடித்ததை தவிர.
இவை மொத்தமும் அன்றைக்கு வெறும் 3000 ரூபாயில் முடிந்துள்ளன. இன்றைக்கு அது பல மடங்கு உயர்ந்திருந்தாலும் அந்த சந்தோசத்தை தருவதில்லை. எதிர்கலாத்தில் என் பெண்ணின் மூலம் அவை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்/நம்பிக்கையில் நாளைய தீபாவளியை எதிர்நோகியுள்ளேன்.

0 comments :
Post a Comment