.
எங்கள் நிறுவனத்தில் Cheque மோசடி வழக்கு காரணமாக சென்றேன். உள்ளூரில் வசிப்பவர் பேரில்தான் கேஸ் போட முடியும் என்பதால் என் பெயர் முன்மொழியப்பட்டது. கம்பெனி வக்கீலை சென்று சந்தித்து அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்தேன், அங்கேயே ஏழரை ஆரம்பித்தது. சில வங்கி நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் இல்லாததால் மனிதர் டென்ஷன் அடைந்து விட்டார். எப்படியோ சமாளித்து தகவல்களை கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து கேஸ் file செய்ய கோர்ட்க்கு வரச்சொன்னார். நானும் நம்மை இன்றே ஜட்ஜ் கேள்வி கேட்க ஆரம்பிப்பார் என்ற ஆர்வத்தில் நேரத்திலேயே சென்றேன். வக்கீலின் ஜூனியர் மட்டும் போன் செய்து இன்னும் சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வந்து ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அடுத்த வாரம் வரச்சொல்ல என் சுருதி சட்டென இறங்கியது.
அடுத்த வாரம் கூப்பிட்டு சரியாக நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார். இந்த முறை கோர்ட் ரூமுக்கே வரச்சொல்ல ஆர்வம் அதிகரித்தது. அங்கே சென்று அவமானப்பட போவது தெரியாமல் நேரத்திலேயே சென்றேன். பிறகு தான் வக்கீல் வரமாட்டார் என்று தெரிந்தது சரி ஜூனியர் வருவார் என பார்த்தால் அவரும் கழண்டு கொள்ள, ஜூனியரின் ஜூனியர் ஒருவர் சரியாக கோர்ட் ஆரம்பிக்கும் முன்னர் வந்தார். வந்தவர் என்னிடம் கோர்ட் அறை வாசலில் எல்லோர்க்கும் முன்பாக சென்று நிற்குமாறு கூறிவிட்டு அறையின் உள்ளே சென்றார். கோர்ட் அறையின் முன்புறம் என்றதும் ஏதோ யாரும் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு இதை சொல்கிறார் என நினைத்துக்கொள்ள வேண்டாம். அது ஒரு சிறிய அறை ஆனால் முன்புறம் மட்டும் ஒரு நூறு பேருக்கும் மேல் வாசலை அடைத்துக்கொண்டு நின்று இருந்தனர். இதில் எப்படி எல்லோருக்கும் முன்பு போய் நிற்பது என்று நினைத்தேன். சரி நிற்கவில்லை என்று திட்டி விட்டால் என்ன செய்வது என்று முண்டியடித்து முன்னேறினேன். முதலில் பின் வாசலில் நின்று இருந்தவர்களை அழைத்தனர். அவர்கள் ஜட்ஜ்க்கு எதிர்புறம் இருந்த கூண்டில் நின்று கையெழுத்து போட்டனர். சரி இங்கு இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் போல, நாம் அங்கே நிற்போம் என நகர்ந்தேன். அங்கே சென்ற பதினைந்து நிமிடத்தில் மொத்த கூட்டமும் களைய நான் மட்டும் நின்றிருந்தேன். பிறகு தான் சோதனையே, இப்பொழுது முன் வாசல் முறை போல. அங்கிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். இது என்னடா கொடுமை என்று அங்கே ஓடினேன். இம்முறை கூட்டம் உஷாராகி வழி விட மறுக்க கடைசி இடமே கிடைத்தது. கூட நின்றவரிடம் இரண்டு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அவர் பின் வாசல் கொலை மற்றும் பிற வழக்குகளில் இருப்பவர்கள் தினமும் கோர்ட்டில் கையெழுத்திட வருபவர்கள் , இந்த கூட்டம் மற்ற பொது வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் என்றார்.
நேரம் அதிகரிக்க கூட்டம் குறைய தொடங்கியது. என் முறை வந்த போது கம்பெனி பெயருடன் என் பெயரை சேர்த்து சொன்னார்கள், கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள் நுழைந்தேன். முதலில் ஒரு முறை அறையை நோட்டமிடலாம் என்று ஜட்ஜ், டைப் அடிக்கும் பெண்மணி, அவருக்கு கீழ் இருந்த பெண்மணி, தவாளி, உட்கார்ந்திருந்த வக்கீல்கள் என்று சுற்றி பார்த்து திரும்பவும், ஜட்ஜ்க்கு கீழே இருந்த பெண்மணி 8-1 வாய்தா என சொல்ல ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க, மறுபடியும் சொன்னார். நான் எதும் சொல்லாமல் அவரையே பார்க்க, அவர் மறுபடியும் வாய்தாங்க என்றார். என் பின்னாடி இருந்தவர் என்னை சரி என்று சொல்லிவிட்டு பின்னாடி வாப்பா என்று காதில் கிசு கிசுக்க, நான் அந்த பெண்மணியிடம் ஓகே என்று விட்டு பின்னால் நகர கோர்ட் மொத்தமும் சிரித்தது. ஒன்றும் புரியாமல் முழிக்க ஒருவர் தலையிலடித்துக்கொண்டு வாய்தா ன்னு சொன்னா வந்துரனும் என்றார். போயிட்டு அந்த தேதியில வாங்க என்றார். என்னடா இது நம் நினைப்பிற்கு மாறாக நடக்கிறதே என்று வெளியில் வந்து விட்டேன்.
இப்படியாக ஆறு முறை வாய்தாவிலேயே முடிந்து போனது. இறுதியாக கடந்த திங்கட்கிழமை வரச்சொன்னார்கள். எப்படியும் வாய்தா என்ற முடிவில் தான் சென்றேன். அன்றைக்கு வழக்கத்தை விட காத்திருந்தேன். உணவு இடைவேளை வந்த பிறகு தான் தெரிந்தது எங்களுடைய கேஸ் கட்டை கோர்ட்டில் தொலைத்து விட்டார்கள் என்று. இப்படியும் நடக்குமா (எனக்கு மட்டும் நடக்கும்) என நினைத்துகொண்டு இருக்க ஜூனியர் சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். சாப்பிட்டு விட்டு வர அவரோ நாளைக்கு வாங்க என வழி அனுப்பி வைத்தார். அடுத்த நாள் கடுப்பிலேயே போய் நின்றேன். ஜூனியர் என்னிடம் வந்து வழக்கம் போல அறையின் முன்புறமாக நிற்க சொல்ல கோபம் வந்ததும் "எப்படியும் வாய்தா தான் இதுல முன்னாடி நின்னா என்ன பின்னாடி நின்ன என்ன" என்று கேட்க தோன்றி நாகரிகம் கருதி அமைதியாக நின்றேன். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
மதியம் ஒரு மணி வரை அழைப்பு வராததால், சரி கேஸ் கட்டு இன்னும் கிடைக்க வில்லை போல என்று என்னும்போதே அழைப்பு வர எதுவுமே சொல்லாமல் ஜட்ஜ்க்கு கீழ் இருக்கும் பெண்மணி பார்த்துக்கொண்டிருக்க, என்னை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை அழைத்தார். சரி இதுவும் எதோ புது முறை போல என நினைத்துக்கொண்டு வெளியேறினேன். ஜூனியர் வந்து சாப்பிட போகாமல் ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். வெறுப்பில் வேடிக்கை பார்க்கலாம் என நின்றால் கால் வலிக்க, வெளியில் இருந்த திண்ணையில் சென்று அமர. அங்கு ரிமாண்டுக்கு வந்த கைதிகள் வேறு பலத்த பாதுகாப்புடன் இருக்க, ஒரு ஓராமாக உட்காந்தேன். சரியாக இரண்டு மணிக்கு அழைக்க நானும் வாய்தா என்ற முடிவிலேயே சென்றேன். ஆனால் கோர்ட் பெண்மணி என்னை கூண்டில் ஏறி நிற்க சொன்னார். பதட்டத்தில் ஏறி நின்றேன்.
"சத்தியமாக" என்று சொல்லுமாறு என்னிடம் சொல்லப்பட, எங்கே பகவத் கீதையை காணோம் என்ற ஏமாற்றத்தில் அப்படியே பிழையில்லாமல் சொல்லிவிட்டு நின்றேன். பிறகு ஜட்ஜ் ஒவ்வொரு கேள்வியாக பொறுமையாக கேட்க நானும் பதில் சொல்ல அவருக்கு அருகில் இருந்த டைப் ரைட்டர் ஒரு பேப்பரில் நான் சொன்னதை அப்படியே அடித்து அதில் கையெழுத்து போட்டுவிட்டு போக சொன்னார்கள். நானும் கூண்டை விட்டு இறங்கி கையெழுத்து போட செல்ல, ஜூனியர் தடுத்தார். மறுபடியும் கையெழுத்து போட சொல்லி அழைப்பு வர, நான் செல்ல ஜூனியர் தடுக்க, கடுப்பாகி அவரிடம் போகவாங்க என்று கேட்டேன். அவரோ வெளியில் நில்லுங்க என்றார். வெளியில் நிற்கும்போது ஜூனியர் வந்து பாராட்டினார். நன்றாக தடுமாறாமல் பதில் சொன்னதாக. சரி கையெழுத்து எப்ப போட பசிக்குதுங்க எனும்போதே தவாளி வந்து நின்றார். அவரிடம் ஜூனியர் இருபது கொடுக்கச்சொல்ல, இதற்கு தானாடா இவ்வளவு என்று அலுத்துக்கொண்டே பர்சில் கைவிட ஒரே ஒரு ஐம்பது மட்டும் பல்லிலத்தது, அவரும் பல்லை இளித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். இவ்வாறாக என் முதல் அனுபவம் முற்றுப்பெற்றது. இதில் நடந்த சில சுவராஸ்ய தகவல்களை அடுத்து பகிர்கின்றேன்.
இதுவரை கோர்ட் நடவடிக்கைகளை திரையில் மட்டுமே கண்ட எனக்கு முதல் முறையாக அவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் கோர்ட், கல்லூரிக்கு அருகாமையில் அமைந்தும் அதன் நடவடிக்கைகளை பார்க்கும் ஆர்வம் இல்லாததால் உள்ளே சென்றதில்லை. அதிகபட்சமாக குறைந்த விலையில் கிடைத்த மதிய உணவிற்காக மட்டுமே சென்றுள்ளேன். இப்பொழுதுதான் அதுவும் அலுவகல பணியின் காரணமாக செல்ல வேண்டி இருந்தது.