நமது மத்திய வங்கி கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணம் 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட தாள்களில் அச்சிட்ட ஆண்டு கிடையாது. அதற்கு பின்பே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.
வரும் மார்ச் 31, 2014 க்கு பின்பு இந்த தாள்கள் முழுமையாக புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுகின்றன. ஏப்ரல் 1, 2014 முதல் இந்த தாள்களை எந்த வங்கிகளும் கொடுத்து புதிய தாள்களாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜூலை 1, 2014க்கு பிறகு வாடிக்கையாளராக இல்லாத வங்கிகளில் பத்து தாள்களுக்கு அதிகமாக மாற்ற விரும்புபவர்கள் தங்களின் சுய அடையாளம் மற்றும் குடியிருப்பு முகவரிக்கான சான்றுகளுடன் மாற்றிக்கொள்ளலாம்.
ரூ.50,000/- மேல் பணப்பரிமாற்றம் செய்பர்வகள் தங்களுடைய PAN கார்ட் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பத்து லட்சத்திற்கு அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் பற்றிய விபரம் நிதி புலனாய்வு பிரிவிற்கு தெரிவிக்கப்படும். பண மாற்று பரிவர்த்தனையின் போது ஐந்துக்கும் அதிகமான கள்ள நோட்டுக்கள் இருந்தால் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட வேண்டும்.

மார்ச் 31 க்கு பிறகும் இவற்றை மாற்றிக்கொள்ள வங்கிகள் அனுமதிக்கும் எனவே பயப்பட தேவையில்லை. ஆனாலும் அதற்கு முன்பாகவே மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரும்ப பெறுவதற்கான காரணங்கள்:
1. பாதுகாப்பு:
2005க்கு முந்தைய தாள்கள் அதற்கு பிறகு அச்சிடப்பட்ட தாள்களை விட பாதுகாப்பு அம்சங்கள் குறைவானவை. மிக அதிகமான போலித்தாள்கள் 2005க்கு முந்தையதன் நகல்களே.
2. கருப்பு பணத்தை ஒழிப்பது:
பணத்தின் மதிப்பு என்பது பரிமாற்றத்தில் இருக்கும் வரை மட்டுமே. எனவே புழக்கத்தில் இருந்து அவை அகற்றப்படும்போது அவற்றின் மதிப்பு பூஜ்யம்தான். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் கண்டிப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.
3. பணப்பதுக்கத்தை ஒழிப்பது:
இந்த திட்டத்தின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் தானாக சந்தைக்கு கொண்டு வரப்படும். ஆனால் அதை கண்டிப்பாக நடைமுறை படுத்துவதன் மூலமே சாத்தியம்.

0 comments :
Post a Comment