இந்த இடுகையை படிக்கும் முன்பு நீங்கள் சமாதனத்தை விரும்புபவராக இருந்தால் இதற்கு மேல் தொடர வேண்டாமென கேட்டுகொள்கிறேன்.
இரண்டு தினங்களுக்கு முன்பு காஷ்மீர், பூஞ்ச் மாவட்ட எல்லையில் நம்முடைய இரு வீரர்களை கொன்று ( Lance Naik Sudhakar Singh and Lance Naik Hemraj) தங்களுடைய வெற்றியின் அடையாளமாக அவர்களுடைய தலையை பாகிஸ்தானியர்கள் எடுத்து சென்று உள்ளனர் .
ஆனால் அவர்களுடைய ராணுவம் இதை மறுத்துள்ளது. நம்முடைய அரசாங்கம் வெறும் சடங்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
நாம் புகார் தெரிவிக்கும் முன்பே பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய-பாக் ராணுவ கண்காணிப்பு குழுவிடம் (UNMOGIP) நம்முடைய வீரர்கள் LOC என்பாடு பொது எல்லையை தாண்டி ரோந்து செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 740 km எல்லையான LOC ல் 550 km வலை படுத்தப்பட்ட பகுதியாகும். இது முழுக்க மின்சார மயமாக்கப்பட்டது (நல்ல வேலை இது தமழிகத்தில் இல்லை) மற்றும் மனித நடமாட்டம் அறியும் கருவி, கண்ணிவெடிகள் உள்ள இடம். இவை எல்லாவற்றும் மேல் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
நம்முடைய அரசாங்கம் இதற்கு இன்னும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை அல்லது ஐக்கிய நாடுகளிடம் புகார் தெரிவிக்க வில்லை.
நாம் இன்னமும் எச்சரிக்கை கூட செய்யவில்லை, இந்த நேரத்தில் நாம் இஸ்ரேல் இடம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. ஆனால் அப்படி பேசுபவர்களை எதிர்பதர்கேன்றே சில கட்சிகள் நடத்தப்படுகின்றன. நான் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் பற்றி சொல்லவில்லை. இந்த கட்சிகளுக்கு மதம் மற்றும் சாதியை வைத்து மக்கள் ஓட்டுகள் வாங்குவது எப்படி என்று யோசிக்கவே நேரம் உள்ளது. இதில் இராணுவம் மற்றும் மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இவர்களுக்கு அடுத்து பிராந்திய கட்சிகள், இவர்களுக்கு நாட்டை பற்றிய அக்கறை என்பது துளியும் கிடையாது. சொந்த நலனே மிக முக்கியமானது (DMK,BSP,NCP,RJD). முதலில் இவர்களைத்தான் அடக்க வேண்டும்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர்கள் முழுநேர போருக்கு தயாராக இருபது போல் உள்ளது. நாம்தான் சமாதான கொடி பிடித்து கொண்டிருக்கிறோம். அங்கே யார் ஆட்சியில் இருந்தாலும் இந்திய எதிர்ப்பு குறைவதே இல்லை. நாம் மட்டும் எவளவு குண்டுகள் வெடித்தாலும் , எவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டாலும், எந்த ஒப்பந்தங்களையும் மதிக்காத நாட்டுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறோம்.
இஸ்ரேல் தன்னுடைய நாட்டில் ஒரு குண்டு விழுந்தால் எதிரி நாட்டில் பத்து குண்டுகளை போடுகின்றனர். நாம் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்ச நடவடிகையாக அவர்களுடான வர்த்தக உறவை துண்டிக்கலாம். இது இந்த அரசங்கத்தால் முடியாத காரியம்தான் நம் மன குமுறல் போல அப்படியே இருக்க வேண்டியதுதான்.
நம்முடைய அரசாங்கம் கவலை பட நிறைய விஷயங்கள் இருக்கும்பொழுது அவர்களால் இதற்கு முக்யத்துவம் தர இயலாதுதான்.