Jan 5, 2013

India Population & Literacy Rate


 இந்திய மக்கள் தொகை வளர்ச்சி மற்ற எல்லா துறைகளையும் விட மிக வேகமாக வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றிய அறிவு எல்லோருக்கும் போதுமான அளவு உள்ளதால் நாம் வளர்ச்சியை மட்டும் ஆராய்வோம்.

முதலில் நம் நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையானது 2011 கணக்கெடுப்பின் படி 
121 கோடி,  இது 2001 ம் ஆண்டை விட 18 கோடி அதிகம்.  

இதில் கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 83.3 கோடி. நகரங்களில் வசிப்பவர்கள் 37.7 கோடி. இவை இரண்டுமே 2001 ம் ஆண்டை காட்டிலும் 9 கோடி சரிவிகித அளவிலே மக்கள் தொகை பெருகி உள்ளது. 




நம் தமிழ் நாட்டின் பங்கு 7.21 கோடி, இது 2001 ம் ஆண்டை விட 97 லட்சம் பெருகி உள்ளது. தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் வசிப்போர் 3.7 கோடி மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் 3.5 கோடி. நகர்புற மக்கள் பெருக்கம் 2001 ம் ஆண்டை காட்டிலும் 75 லட்சம் மற்றும் கிராமப்புற பெருக்கம் 23 லட்சம்  என்ற அளவிலும் பெருக்கெடுத்து உள்ளது.




கல்வி வளர்ச்சி:


இந்தியாவின் கல்வி கற்றோர் விகிதாசாரம் 2011 ம் ஆண்டு படி 74%. மற்ற வளரும் நாடுகளை விட மிக குறைவான வளர்ச்சியே. கடந்த பத்தாண்டு வளர்ச்சி 10% சதவிகித அளவில் உள்ளது.




கிராமங்களில் கல்வி வளர்ச்சி விகிதம் 70% ம் நகரங்களில் 85% என்ற அளவில் உள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம்  மொத்தமாக 80% என்று கடந்த பத்து ஆண்டுகளை விட 7% வளர்ச்சி பெற்று உள்ளது. இதில் கிராமங்களில் 74% மற்றும் நகரங்களில் 87% என்ற அளவில் படித்த மக்கள் உள்ளனர். 



நன்றி: Census of India.


0 comments :

Post a Comment