இன்றைக்கு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆனால் தமிழ் நாட்டுக்கு இல்லாத ஒன்று.
சென்னை மக்கள் அனுபவிக்கும் இன்னல் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. இங்கே கோவை-ல் குறைந்த பட்ச்சம் 12 மணி நேரம்.
இரவில் 9 மணிக்குப் பிறகு ஒரு மணிக்கொரு தரம் நீங்கள் மெழுகுவர்த்தி ஐ தேட வேண்டும் உங்களிடம் UPS இல்லையென்றால். சென்னை ல இருந்து வரவங்களுக்கு மொதல கஷ்டமா இருக்கும், but கும்கி படத்தில் ஜோஸ்யர் தம்பி ராமையவிடம் சொல்வதுபோல் அதுவே பழகிடும்.
இங்கே நாங்கள் கற்கால வாழ்கைக்கு பழகி கொண்டோம். இதில் மிகவும் திண்டாடுபவர்கள் தொழில் முனைவோர்கள் தாம்.
இவர்களும் இப்பொழுது மாற்று வேலை தேடுகிறார்கள். அரசியல்வாதிகள் இந்த பிரச்சனைய மட்டும் கண்டு கொள்வதே இல்லை. அவர்கள் யார் இதை பற்றி கவலை பட, அவர்களுக்கு road contract, etc contract ல கொள்ளை அடிக்கவ நேரம் போதாது.
நம்ம நாராயணசாமி வேறு 15 நாள் நு சொல்லிக்கிட்டு இருக்கரு (காமெடி). இவருக்கெல்லாம் ஒரு நைட் கரண்ட் கட் பண்ணா தெரியும், night தூங்காம இருந்து ஆபீஸ் போறது எப்படின்னு.
இந்த காமெடி scene ஐவிட்டு இப்பொழுது தமிழ்நாட்டை பற்றிய தகவல்களை பாப்போம்.
தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி 17,650 MW. இதில் வீடுகளுக்கு மின்சாரப் பயன்பாடு 93.4% ம் மண்ணெண்ணெய் பயன்பாடு 5.9% ம்
Solar power 0.1% ம் உள்ளது.
இந்திய அளவில் வீடுகளுக்கான மின்சார பயன்பாட்டில் நாம் 11ம் இடத்தில உள்ளோம். பற்றாகுறை 12% அளவில் உள்ளது.
இதில் எதாவது சரி பண்ணி எங்களுக்கு கொஞ்ச நேரம் அதிகமா current குடுங்கப்பா.
0 comments :
Post a Comment