விபத்து:
நான் இது நாள் வரை சந்திக்காத ஒன்று. அதாவது
மிகச்சிறிய நொடிபொழுதில் விபத்தில் இருந்து தப்பித்து இருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் ஒருவித படபடப்புடன் அடுத்த சில நிமிடங்கள் நகரும். அந்த
நேரத்துக்கு மட்டும் பலவித கட்டுபாடுகளை மனம் விதிக்கும், மூளையும்
கேட்டுகொள்ளும், அதுவும் தூங்கி எழும் வரைதான். அதற்குப்பிறகு வழக்கம்போல Racing & Chasing.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அலுவலக பணி
முடித்து இரவு 8 மணிக்கு வீட்டிக்கு கிளம்பினேன், எதிரில் எமன் டவேரா
காரில் வருவது தெரியாமல். நான் இரவு சாப்பாட்டை நினைத்துக்கொண்டு
வழக்கத்திற்கு மாறாக மிக மெதுவாக சென்றேன், அதுவும் அன்றைக்கு ஹெல்மெட்
எடுக்க மறந்தது உணராமல்.
அது ஒரு சிறிய குன்று. அதாவது என்னுடைய
அலுவலகம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது, அதற்கும் பாலக்காடு சாலைக்கும்
நடுவில் அமைந்துள்ளது. மிக குறுகிய சாலையே போடப்பட்டுள்ளது. இந்த குன்றின்
உச்சியில் ஒரு பொறியியல் கல்லூரி வேறு இருப்பதால், காலையில் பல Valentino Rossi கலை கடந்து தான் செல்ல வேண்டும்.
இரவு நேரம் வேறு சாலையும் மிக அமைதியாக எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. ஒரு மிக குறுகிய வளைவில் நான் ஒலி எழுப்பிக்கொண்டு திருப்பும்போதுதான் பார்த்தேன், எமன் மிக அருகில் எந்த ஒலியும் எழுப்பாமல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தான். நான் சுதாரித்து வண்டியை இடது புரமாக ஒடித்து சாலையை விட்டு கீழே இரக்க எத்தனிபதட்குள், எமன் மோதியே விட்டான். நான்
கதை முடிந்தது என நினைத்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்து, தரையில்
வண்டியுடன் கிடந்தேன். கண்களில் பொறி பறந்து, குருவி, காக்கை குஞ்சுகள்
எல்லாம் சுற்றி சுற்றி பறந்தன. சுதாரித்து எழ முற்பட்டபோது என்
வண்டியின் பின் சக்கரம் என்ஜின் அணைக்காதலால் இன்னும் சுற்றிகொண்டிருந்தது
தெரியாமல் கைவைக்க சிராய்ப்பு ஏற்பட்டது. பின்பு தான் சுய நினைவுக்கு
வந்தேன்.
வலது கால் முட்டி மொத்தமாக கிழிந்து எலும்பு தெரிந்தது. பாதத்திலும் வலி இருந்தது. சரி
உதவிக்கு ஒரு வரை அழைக்கும்போது தான் தெரிந்தது மேல் முன் வரிசை பற்களில் 3
ஆட்டம் காண்பது. உதவிக்கு வந்தவர் என் மொபைலுடன் வந்தார். அவரிடம் தவறு
என்னுடையதல்ல என்றும் எங்கெங்கு அடி பட்டதை சொல்லி என் வலது சிறிது
தூக்கியபடி பிடித்துக்கொள்ள சொன்னேன். அதற்குள் சேர்ந்து தண்ணீர்
எல்லாம் முகத்தில் ஊற்றி விட்டனர். நான் நிலைமையை விளக்கி 100 மற்றும் 108
க்கு அழைகச்சொன்னேன். அவர்களோ போலீஸ் வந்தால் பிரச்சனை என்றனர். உங்களுக்கு
யோசிக்க தோன்றும் என் மொபைல் என்னவாயிற்று என்று. அது என்னவோ கீழே
விழுந்ததில் அவுட் கால் மட்டும் போகவில்லை. இதற்கு நடுவில் என் மனைவி
விடாமல் எனக்கு அழைத்துக்கொண்டு இருந்தால். நான் உதவிக்கு வந்தவரிடம் என் அலுவக
நண்பரின் எண்ணை சொல்லி அவரை அழைக்க சொன்னேன். அவர்கள் 10 நிமிடத்தில்
வந்துவிட்டனர். அதுவரை 108ம் வரவில்லை. சரி இதற்கு மேல் முடியாது என ஆட்டோ
ஒன்றில் செல்ல முடிவெடுத்தேன். அலுவலகத்தில் இருந்து இருவர் வந்திருந்தனர்.
ஒருவரை அந்த எமனின் தேரோட்டியை போலீசிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு, இன்னொரு
நண்பர் மற்றும் நான்கு பேர் தயவில் ஆட்டோவில் கிளம்பினேன்.
அங்கிருந்து பாலக்காடு சாலை வந்து 2 நிமிட பயணத்தில் இன்னொரு எமனை சந்தித்தேன். எங்கள்
ஆட்டோ சரியாகத்தான் சென்றது, எதிர் திசையில் வந்த லாரி திடீரென வலது
புறமாக திரும்பியது ஆட்டோ ஓட்டுனர் தடுமாறி வண்டியை
நிறுத்திநர். நான் பின்பக்க இருக்கையில் படுத்துக்கொண்டே இதை பார்த்தேன்.
இதற்குமேல் முடியாதுடா வந்து அடிச்சுகோடா எமா என்ற முடிவுக்கு
வந்துவிட்டேன். அதற்குள் பின்பக்கமாக வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஆட்டோ-ல்
மோதி நிறுத்தினார். லாரி ஓட்டுனர் சிரித்து விட்டு கிளம்பினார். "அட
சாக கெடகரவன வெச்சுகிட்டு என்ன காமெடி பண்றீங்களா?" ன்னு கேட்க ஆட்டோ
டிரைவர் திரும்ப வேகம் எடுத்தார். நான் தனியார் ஆஸ்பத்திரிக்கு போக சொல்ல
டிரைவரோ அரசு ஆஸ்பத்திரி என்றார். இந்த நேரத்தில் விவாதம் உடம்புக்கு
நல்லதில்ல என்று அவருக்கு ஓகே சொன்னேன். நடுவில் என் மனைவி தொடர்ச்சியாக
கால் செய்துகொண்டு இருந்தாள் எனக்கும் என் நண்பருக்கும்.
அரசு மருத்துவமனை :
நான் அரசு மருத்துவமனையை பற்றிய படங்களை நினைத்து பீதியில் இருந்தேன். குனியமுத்தூர்
அருகில் எதிரில் 108 ஆம்புலன்ஸ் வர டிரைவர் கையை காட்டி நிறுத்த சொன்னார்,
அவர்கள் மிக அவசரமாக நிறுத்தாமல் சென்று விட்டனர். யாரை காப்பத்தவோ? இறுதியில் அரசு மருத்துவமனை அடைந்து அவசர சிகிச்சை பிரிவு சென்றார் ஓட்டுனர். உடனே
ஒருவர் strecher கொண்டு வர உள்ளே அழைத்து சென்றனர். அங்கு நான் பயந்ததற்கு
மாறாக உடனடி சிகிச்சை அளித்து என் சுய விவரங்களை பெற்றுகொண்டனர் கூடவே குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? என
கேட்டு வைத்தனர். அதற்கு
பிறகு எலும்பு சிகிச்சை பிரிவு அழைத்து சென்றனர். அங்கு இடமில்லா
காரணத்தினால் சிறிது நேரம் காக்க வைத்தனர். ஐந்து நிமிடங்களில் திரும்ப
அழைத்து காயங்களை பார்த்தனர். இங்கும் குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? என
கேட்டு வைத்தனர்.
பிறகு முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல்
போட்டனர். அப்பொழுது பக்கத்தில் இருந்த படுக்கைக்கு ஒரு நபரை அழைத்து
வந்தனர். அவர் மிகவும் சத்தம் போட்டதால் என்னை பார்த்து கொண்டிருந்த
மருத்துவர்கள் அவரிடம் சென்றனர். எனக்கோ வாய் முழுக்க ரத்தம், பேச கூட
முடியவில்லை. சரி அந்த மனிதரை வேடிக்கை பார்க்கலாம் என்று திரும்பினால்
அவர் முகம், கை என எங்கும் அடிபடவில்லை. கால் மட்டும் தெரியாத அளவு
துணியால் சுற்றி இருந்தது. பின் பிரித்தனர் மனிதருக்கு இடது காலில்
பாதத்தின் கீழே சதையே இல்லை, வெறும் எலும்பு மட்டும் தெரிய, பெரு விரல்
உடைந்து ஊசலாடியது. இதற்கு மேல் எவ்வளவு வலி ஏற்பட்டாலும் கத்தவோ, கதறவோ கூடாது
என முடிவெடுத்து கண்ணை மூடி படுத்து கொண்டேன்.
இதற்குள் என் ஊர்
மற்றும் அலுவலக நண்பர்கள் என் மனைவி என எல்லோரும் வந்திருந்தனர். சரி
அவர்கள் பயந்து விடக்கூடாது என்று கையை ஆட்டி வலி இல்லாதது போல்
காட்டிக்கொண்டிருந்தேன்.
பின்னர் வேறு மருத்துவர்கள் வந்து தையல் போடும் வேலையை ஆரம்பித்தனர். என்னடா இவங்க இன்னும் அந்த கேள்விய கேக்கலியேன்னு நெனைக்கும்போதே கூட இருந்த ஒரு நர்ஸ் அத கேட்டாங்க. அட அதாங்க குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? .முதன்
முதலாக உடம்பில் தையல் போடப்பட்டது. வெளியில் திடீரென அழைத்து வந்தனர்
என்னடா காயம் இன்னும் இருக்கே ஒரு தையல் தான போட்டிருக்கு என நினைக்க,
நண்பர்கள் வந்து உடனடியாக தனியார் மருத்துவமனை செல்லலாம் என்று அவர்களின் ஆம்புலன்சுடன் காத்திருந்தனர் .
தொடரும்..... அனுபவங்கள் ...
0 comments :
Post a Comment