"சாமி நட்ட நடு ராத்திரியில எல்லாம் தெருவுக்கு போனா குடுகுடுப்பைகாரன் வருவான், நம்ம அவன பார்க்கக்கூடாது." குழந்தை பருவத்தில் அம்மா அடிக்கடி சொன்ன வார்த்தை. இதனால் ஒண்ணுக்கு போக கூட பயப்பட்டு பாயிலேயே போன நாட்கள் பல.
பள்ளிபருவத்தில் ஊர் நண்பர்களிடம் இதை பற்றி பேசப்பேச குடுகுடுப்பைக்காரன் அபரிமிதமான திறன் கொண்ட மனிதனாக வளர்ந்தான். அதாவது அம்மாவாசை இரவு 12 மணிக்கு சுடுகாட்டில் பிணத்தை வைத்து பூஜை செய்து அதற்கு பின்னர் வரும் ஞாயிறுகளில் ஊரை அம்மணமாக வளம் வருவான் என்றும், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று உடுக்கை அடித்து விட்டு சென்றான் என்றால் காலையில் திரும்பவும் வந்து குறி சொல்வான். இரவில் அவன் எதிரில் சென்றால் ரத்தம் கக்கி சாக நேரும் என ஏராள சக்தி படைத்தவனாக பேச்சின் மூலம் வளர்ந்தான்.
இதன் காரணமாக இரவில் பத்து மணிக்கு அப்புறம் கேட்கும் சத்தம் எல்லாம் குடுகுடுப்பைகாரன் சத்தமாகவே பட்டது. போதாதற்கு அம்மாவிடம் காலையில் பக்கத்து வீட்டு அக்கா கு.கு காரனின் வருகையை பேசி என்னை பீதிக்குள்ளக்குவாள்.
விளையாட்டின் மூலம் சிறிது காலம் மறந்திருந்த சூனியம் டியூஷன் வடிவில் வந்தது. ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலம் மிகவும் கசந்ததால் பக்கத்து ஊருக்கு டியூஷன் சென்றேன். ஏனென்றால் பல நண்பர்கள் அங்கேதான் சென்றனர். ஒரு வாரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது. தினமும் எல்லோரும் ஒன்றாக சைக்கிளில் சென்று திரும்புவது வழக்கம். அன்றைக்கு ஏழரை ஆங்கில வடிவில் வந்தது. டியூஷன் வாத்தியாருக்கு என்னுடைய ஆங்கில புலமை தெரிய வந்ததால் அன்று ஒரு மணி நேரம் அதிகமாக வகுப்பு எடுத்தார். அதனால் நான் மட்டும் 9 மணிக்கு வீட்டுக்கு கிளம்பினேன். தனியாக செல்வதை பற்றி யோசிக்கவே இல்லை, நடுவில் இருக்கும் சுடுகாட்டை நெருங்கும்போதுதான் பயம் உச்சந்தலைக்கு உரைத்தது.
சிறிது நேரம் நின்று யாராவது வருகிறார்களா என பொறுத்திருந்து பார்த்தால் யாரையும் காணோம். பஸ் மற்றும் பைக்காரர்கள் தான் வேகமாக சென்றனர். சரி கண்ணை திருப்பாமல் வேகமாக சென்று விடலாம் என முடிவெடுத்து சைக்கிளை மிதித்தேன். சுடுகாட்டை நெருங்கும்போது இதயம் வாய் வரை வந்து சென்றது.மனதில் பார்க்க கூடாது என நினைப்பதை தான் ஓரக்கண்ணால் பார்க்க தோன்றும் என்ற விதிப்படி ஓரக்கண்ணால் சுடுகாட்டை பார்த்தல் அங்கே ஒரு பிணத்தை எரித்து கொண்டு இருந்தார்கள்.அவ்வளவுதான் எனக்குள் என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. வேகம் என்றால் வேகம் பேய் வேகத்தில் சைக்கிளை மிதித்தேன். இரண்டே நிமிடத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மனித நடமாட்டம் தெரிந்த ஊர் எல்லையில் தான் சைக்கிளை நிறுத்தினேன். தூக்கத்தில் எரிகிற பிணம் என்னை துரத்தியதில், அன்றோடு டியூஷன் அத்தியாம் முடிந்தது.
இளம் வயதில் நண்பர்களுடனான பேச்சில் ஊரில் யாரெல்லாம் சூனியம் வைப்பவர்கள், என்ன என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சி வெகு தீவிரமாக நடந்தது. இந்த காலகட்டத்தில் தான் கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் அறிமுகம் ஆனது. அதில் வரும் பணிக்கர்கள் மற்றும் தனி பங்களாக்கள் பற்றி உருவகம் செய்து தூக்கம் இழந்தேன். இரவில் கேட்கும் எல்லா சத்தங்களுக்கும் காரணம் குகு காரனே என்ற எண்ணம் ஏற்பட்டது. மார்கழி மாத அதிகாலை பஜனைகள் கூட அவனுடைய சத்தமே என்றது மனம்.
கல்லூரி காலத்தில் இவற்றை சோதனை செய்து பார்க்கும் அளவுக்கு மன திடம் ஏற்பட்டது. எல்லா நாள் இரவில் சுடுகாட்டுக்கு சென்றாலும் அது யாரும் இல்லாமல் அநாதையாகவே இருந்தது. குகு காரன் சத்தம் கேட்கும்போது எழுந்து வந்து பார்த்தால் அவன் மிக சாதரணமாக என்னை கடந்து போனான். மேலும் ஆராய்ந்ததில் குகு காரர்கள் என்பது குறி சொல்வதை தொழிலாக கொண்டுள்ள சமூகம் என தெரிந்தது. அவர்களை பற்றிய பயம் ஒழிந்து எந்த நேரத்திலும் எங்கும் செல்ல தைரியம் ஏற்பட்டது.
சும்மா இருந்த சூனியத்தை என் சித்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள், என்னுடைய தாத்தா இறந்த சமயத்தில் என் சித்தி குடும்ப சண்டையில் கோபத்தில் என் அப்பாவுக்கு சாபமிட, அதேபோல அவர் சில வருடம் கழித்து இறந்ததும் அம்மா ஜோசியம் பார்க்க சித்தப்பா குடும்பம் செய்த சூனியத்தால் தான் இறந்தார் என்றதும் எனக்கு ஜோசியக்காரன் மேல்தான் கோபம் .வந்தது. அதுவும் சூனியத்தை வீட்டினுள் வைத்து உள்ளனர் என்றதும் சிரிப்புதான் வந்தது. ஜோசியக்காரனுக்கு இது தொழில், அதற்காக அவன் ஏதாவது பொய்யை சொல்லியே ஆக வேண்டும். பிறகு ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இப்படிப்பட்ட பேச்சுக்கள் மறைந்தன.
காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனிக்குடித்தனம் என்று ஆனது. நன்றாக சென்ற வாழ்க்கையில் சூனியம் மனைவியின் வடிவில் திரும்ப வந்தது. தங்கையின் கணவருக்கு என் அம்மாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் என்னுடைய அம்மாவை பற்றி மிக நல்ல விதமாக என் மனைவியிடம் சொல்ல, அவளும் நல்லவற்றை தவிர கேட்டுக்கொண்டாள். பிறகு ஒவ்வொரு சண்டைக்கும் காரணம் என் அம்மா வைத்த சூனியம் என்று பேச ஆரம்பித்தாள். மேலும் மாமியாரும் சேர்ந்து கொண்டு கோவிலில் சாமியாடி சொன்னார், உங்கள் வீட்டுக்குள் உள்ளது என்று. எவனோ ஒரு சாமியடியாம் அவன் சொன்னால் நம்புகிற மக்கள், அவனைப்பற்றி அவன் வீட்டில் அல்லது பக்கத்து வீட்டு மனிதர்களிடம் கேட்டால் தெரியும் என மனதில் நினைத்துக்கொண்டேன். ஆனால் மனம் கோபப்படுகிறது சூனியம் இப்படி வாழ்க்கையை சூறையாடுகிறதே என்று.
இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு சென்று சுயமாகவே தன்னிலைக்கு திரும்பிவிட்டேன். இறுதி முடிவு எடுத்துவிட்டேன் நானே சூனியம் கற்று முதலில் எனக்கே வைத்துக்கொள்வது என்று. அதில் நான் பிழைக்காவிட்டால் பேப்பரில் என் மரண செய்தியை தெரிந்துகொள்ளுங்கள். பிழைத்துவிட்டால் அதே பேப்பரில் என்னுடைய கீழ்காணும் விளம்பரத்தை பார்த்து என்னிடம் வாருங்கள்.
"உங்கள் தொழில் எதிரிகளுக்கு பில்லி சூனியம் வைக்க வேண்டுமா, பிடித்த பெண்ணை வசியம் செய்ய, அரசியலில் எதிரிகளுக்கு குட்டிசாத்தானை ஏவி விட வேண்டுமா அணுகவும் - மோகன் பணிக்கர் "

0 comments :
Post a Comment