"சகோ Timer Clock ரெடியா இருக்கா?"
"ரெடி சகோ. நான் கன் பவுடர் பேக் பண்றேன்."
"சரி அப்படியே சல்பர் எடுத்துட்டு வந்துருங்க. ஆனா பார்த்து மிக்ஸ் பண்ணுங்க. தப்பானா நம்ம நியூஸ்ல வந்துருவோம்"
"கண்டிப்பா சகோ. நல்லாவே ட்ரைனிங் எடுத்திருக்கோம். தப்பாகாது"
"அதை மிக்ஸ் பண்ணினதும், அந்த கலவையோட பொட்டாசியம் க்ளோரைட் சேர்த்துடுங்க"
"சரிங்க சகோ. நான் பார்த்துக்கறேன் நீங்க போய் டீ குடிச்சுட்டு வந்துருங்க"
"இல்ல சகோ, மதியதுக்குள்ள ஒரு device ஆவது ரெடி பண்ணிடனும். முடிச்சுட்டே போயிடறேன்."
சரியாக மூன்று மணி நேரம் கழித்துவெளியில் வந்தவன்
அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று கொண்டு இருவரிடம் பஞ்சாயத்து பேசிக்கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் "என்ன சார் வாங்க டீ சாப்ட்டு வரலாம்." என்றான். அவரோ "இல்ல தம்பி போயிட்டு வா. சாயந்திரமா வேணா கடைக்கு போகலாம்" என்றதற்கு சிரித்து விட்டு நடையை கட்டினான்.
திரும்பி வந்தபோது அங்கிருந்தவன் ஒரு deviceஐ வெற்றிகரமாக முடித்து விட்டு அடுத்ததில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான். இதேபோல இன்னும் 5 செய்ய வேண்டும், இதை பற்றிய தகவல்களையும் தலைமைக்கு தெரிவித்து விடவேண்டும்.
அடுத்த நாளில் எல்லாவற்றையும் முடித்து விட்டு, கூட இருந்தவனை பத்திரமாக தலைமை இடத்திற்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தேன். இனி மூன்று இரவுகள் நிம்மதியாக தூங்கி அந்த கூட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். இரவு சாப்பாடிற்கு சென்ற போது கான்ஸ்டபில் என்னை எதிர்பார்த்து நிற்பது போல தெரிந்தது. இன்றைக்கு ஏதும் தேறவில்லை என்பது அவர் நிற்கும் தோரணையில் தெரிந்தது. அவரையும் உடன் அழைத்துச்செல்ல அவர் நிறைய கேள்விகள் கேட்க அவற்றை தவிர்க்கும் விதமாக பேச்சை குடியின் மேல் மாற்ற, காத்திருந்ததுபோல் குடிக்க வேண்டும் என்றார். "சரி நான் குடிக்கலை நீங்க போய் குடிச்சுட்டு வாங்க" என்றதும் காசை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்தார். மனிதர் திரும்பி வரும் சாத்தியம் குறைவு என்பதால் நான் சாப்பிட்டு முடித்து கிளம்பினேன்.
இது வரையிலான வாழ்க்கையை நினைத்து பார்த்துக்கொண்டே தூக்கத்தை எதிர்பார்த்து இருந்தேன். கனவில் சிறு வயதில் நண்பர்களுடனான விளையாட்டுக்கள், தங்கையுடனான சீண்டல்கள் வந்து சென்றன. கனவுகள் நீண்டு கொண்டே போனதால் விடியலும் நீண்டது. எழுந்தபோது மணி 11. சரி காலை சாப்பாடு செலவு மிச்சம் மதியம் சாப்பிட்டு விட்டு அப்படியே ஒரு எட்டு மாநாட்டு மேடையை பார்க்கலாம் என்று புறப்பட்டான். வெளியில் வந்ததும் வெயில் சுட்டது. சிறிது தூரம் சென்றதும் நம்ம கான்ஸ்டபில் எதிர்பட்டார்.
"என்ன சார் டூட்டிக்கு போகலயா" இது நான்.
"இல்ல தம்பி, நேத்து கொஞ்சம் ஓவரா போச்சு. காலைல எழுந்திருக்கல. இப்பதான் ஐயா கிட்ட லீவ் சொல்லிட்டு வந்தேன். நீங்க எங்க புறப்பட்டுடீங்க" என்றார்
"இல்லைங்க கடை வீதி வரை போகலாமுன்னு" என்ற பதிலுக்கு
"ரெண்டு கழிச்சு கட்சி மாநாடு நடக்கறதால வழி மாத்தி விடறாங்க. இப்பகூட என் குழந்தகள ஸ்கூல்ல விட ஊர சுத்தி வந்தேன். எதுக்கும் ஆட்டோ புடுச்சுக்கங்க " என்று அட்வைஸ் செய்தார்.
சரியென தலையாட்டிவிட்டு நடையை கட்டினேன். போய்விட்டு வந்தால் இனி வெளியே தலை காட்டாமல் இருக்க வேண்டும்.
மாநாட்டின் முந்தைய இரவில் டிவைஸ்களை எடுத்து பேப்பரில் சுற்றி அதனை ஒரு மஞ்சள் பையில் வைத்துவிட்டு, மற்ற உடைமைகளை எடுத்து ஒரு பெரிய பையில் போட்டு அடைத்து பக்கத்தில் இருந்த குளக்கரையில் வீசிவிட்டு வந்து தூங்கினேன்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து வேஷ்டி சட்டைக்கு மாறினேன். அருகில் இருந்த ஆலயம் சென்று விட்டு வந்து, மற்ற அறைகளை ஒரு சுற்று பார்த்து எந்த தடயமும் இல்லை என்று உறுதியான பிறகு மஞ்சள் பை கையில் எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.
நகர எல்லைகள் எல்லாம் இப்போது காவலர்களால் நிரம்பி வழிகிறது. எனவே அலுவலக நேரத்தில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக நகரினுள் சென்று விடவேண்டும். அதற்கு தகுந்த நெரிசலான பேருந்தில் ஏறி போலிசின் பார்வையில் தப்பினேன். இனி மாநாட்டு திடலில் இருக்கும் போலீஸ் மட்டுமே. ஆனால் அவர்களையும் கட்சிக்காரர்களுடன் சென்று ஏமாற்றி விட்டு மேடையின் அருகில் சென்று அமர்ந்தேன். கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கிறது. அது வரை காத்திருக்க வேண்டும். தலைமையின் உத்தரவுப்படி நான் இன்றுடன் இறந்து விடவேண்டும். ஆனால் வாழும் ஆசை வற்புறுத்துவதால் இதை மட்டும் முடித்து விட்டு ஏதேனும் தூர கிராமத்திற்க்கு சென்று விடவேண்டும். கண்களை துலாவ விட்டேன் தூரத்தில் அட நம்ம கான்ஸ்டபில், அவரை தவிர்க்க பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துகொண்டு இருந்தேன். கான்ஸ்டபில் என்னை பார்க்கவில்லை, சென்றவர் மேடையின் பின்புறம் மறைந்தார்.
எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் கூட்டம் ஆரம்பித்து விடும். அதற்க்கு ஒரு மணி நேரம் கழித்து பையை வைத்து விட்டு நடையை கட்ட வேண்டியது தான். எப்படியும் ஐம்பது பேராவது சொர்க்கம் செல்வார்கள், அது போதும். இப்படியே ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். மேடையை பார்த்தேன் தேசிய தலைவர் ஒருவர் நம் நாட்டை பற்றிய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. எல்லாம் பொய் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பைக்குள் கைவிட்டு டைமர் பட்டனை தேடி பிடித்து 5 நிமிடங்கள் வைக்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவை 10 நிமிடங்கள் என மாற்றி வைத்து, பையை அப்படியே அருகிலிருந்த மரக்கம்பத்தின் ஓரத்தில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.
வேகமான நடையில் மாநாட்டின் வாயிலை எட்டிப்பிடிக்க எட்டு நிமிடங்கள் ஆனது. அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். நடப்பதை இங்கிருந்து வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பலாம். வாட்ச்சை பார்த்தேன் இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. அதற்கு பிறகு நான் தீவிர வாதியல்ல, உயிர் பிழைத்த சுதந்திர மனிதன். தூரத்தில் யாரோ வேகமாக என்னை நோக்கி வருவது தெரிந்தது. இது கான்ஸ்டபில் ஆச்சே இவர் எதுக்கு என யோசிக்கும் போதே தூரத்தில் இருந்து சத்தமாக பேசிக்கொண்டே வந்தார் "தம்பி உங்கள மதியம் இருந்து பார்க்கிறேன் பேசலாமுன்னு முடியல. இது உங்க" அப்பொழுது தான் பார்த்தேன் அது மஞ்சள் பை, அவ்வளவு தான் நேரம் முடிந்தது.
அடுத்த நாள் பத்திரிக்கைகளில்

"தீவிரவாதியை பிடிக்க முயன்ற காவலர் தீவிரவாதியுடன் குண்டு வெடிப்பில் பலியானார்:"
0 comments :
Post a Comment